யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளே இன்று இரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுகின்றது.குறித்த பிரதேசங்களிற்குள் உள்நுழைவது அல்லது வெளியேறுவது முற்றாக தடை செய்யப்படுவதாக மருத்துவர் ஆ .கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: