இலங்கை அரச நிர்வாக அமைச்சின் இணையத்தளம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளம் என்பவற்றின் மீது தமிழீழம் சைபா் போா்ஸ் (Tamil Eelam Cyber Force) எனப்படு்ம் அமைப்பொன்றினால் இன்று காலை சைபா் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்ட தினம் என்பதனால் அரச இணையதளங்கள் மீது ‘தமிழீழ சைபர் படையணி’ சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது

இரண்டு அரசு நிறுவனங்களின் வலைத்தளங்கள் இன்று சனிக்கிழமை இணையவழி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை விமானப்படை இணைய பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த மே.18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் தமிழீழம் சைபா் போா்ஸ் என்ற பெயரில் ஊடுருவிய குழுவினரால் இலங்கையில் பல்வேறு இணையத்தளங்கள் முடக்கப்பட்டன.

இதனையடுத்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) மற்றும் இணைய பாதுகாப்பு மையம் ஆகியவை நிலைமையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்தன.

இந்நிலையில் இன்று மீண்டும் இணையதளங்கள் மீது அதே பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2017, 2018, 2019ஆம் ஆண்டுகளிலும் மே மாதம் 18ஆம் திகதி இலங்கையில் பல இணையத்தளங்களை தமிழீழம் சைபர் போர்ஸ் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here