ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்ட திரை பிரபலங்கள்

0
42

இவ்வுலகில் உள்ள அணைத்து முஸ்லீம் மக்களுக்கும் ரமலான் பண்டிகை மிகப்பெரிய முக்கியமான ஒரு பண்டிகையாகும். கடுமையான நோன்பிற்கு பிறகு கடைசி நாளான ரமலான் தினத்தன்று மக்கள் பெரும் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த முறை ஏற்பட்ட இந்த கொரோனா ஊரடங்கால் பெரிதளவில் எதுவும் செய்ய முடியாமல் மக்கள் கவலையில் உள்ளனர். எனினும், சூழ்நிலையை புரிந்துகொண்டு மக்கள் வீடுகளிலேயே இருந்து கொண்டாடும் நிலைக்கு வந்து விட்டனர்.

நம் தமிழ் சினிமாவிலும் பல்வேறு முஸ்லீம் மதத்தை சேர்ந்த பிரபலங்கள் உள்ளனர். அவர்களில், சிலர் தனது ரசிகர்களுக்கும் உலக மக்கள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் துல்கர் சல்மான், நடிகை நக்மா ஆகியோர் தங்களது சமூகவலைத்தளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

எங்கள் சமூகம் ஊடகம் சார்பாகவும், இவ்வுலகில் வாழும் ரமலான் பண்டிகையை கொண்டாடும் அணைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.