லாரன்ஸ் மாஸ்டருடன் இணையும் பாலிவுட் நடிகை -யார் தெரியுமா ?

0
43

ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான சந்திரமுகியின் 2 வில் ராகவா லாரன்ஸ் சிறிது காலத்திற்கு முன்பு அறிவித்தார். இதை தொடர்ந்து, கியாரா அத்வானி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது .அதன்படி, இயக்குநர்-நடிகர்-நடன இயக்குநர் லாரன்ஸ் பி.வாசு இயக்கத்தில் முன்னணி நடிகராகவும், அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளாராம். ஆமாங்க ,ஜோதிகா இதில் நடிக்கவில்லை என்பது நமக்கு தெரிந்ததே.

இந்த நிலையில் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம், கொரோனா தொற்று நிலைமை சீரானவுடன் தொடங்கப்படவுள்ளது. ராகவா லாரன்ஸ் கியாரா அத்வானியை தன்னுடைய பாலிவுட் அறிமுகமான ‘லக்ஷ்மி பாம்’ படத்தில் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ராகவா லாரன்ஸ் தனது காமெடி-த்ரில்லரான முனி மற்றும் காஞ்சனா தொடர்ச்சிகளுக்கு பெயர் பெற்றவர் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். சந்திரமுகி 2 அந்த அளவிற்கு நகைச்சுவை, பாடல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரமுகில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர், அதே நேரத்தில் நாசர், வடிவேலு, விஜயகுமார் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படம் ஜோதிகாவை புது அவதாரத்தில் காட்டியது. மேலும் அந்த படம் 200 நாட்களுக்கு மேலாக திரையரங்கில் ஓடி மிகப்பெரிய பிளாக்பஸ்டராக மாறியது.

அதே சமயம் இந்த படம் மோகன்லால் மற்றும் ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த மோலிவுட் திரைப்படமான ‘மணிச்சித்ரதாழு’வின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் ஆகும் .