வவுனியாவில் பொலிஸாரால் இரத்ததானம் வழங்கி வைப்பு

0
117

வவுனியாவில் போர் வீரர்கள் வாரத்தை முன்னிட்டு வவுனியா பொலிசாரால் பௌத்த விகாரைகள், கோவில்கள், பள்ளிவாசல்கள், ஆலயங்களில் சமய வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் வசதியற்ற மக்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்கள் போர் வீரர்கள் வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் வவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்ட இரத்தப் பற்றாக்குறையை அடுத்து இன்றையதினம் வவுனியா பொலிசாரால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 25க்கும் அதிகமான பொலிசார் இரத்ததானம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை போர் வீரர்கள் வாரத்தில் பல்வேறு நலத்திட்டங்களை வவுனியா பொலிசாரர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.