வவுனியா தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கடற்படை வீரர்கள்

0
106

வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் மற்றும் பெரியகட்டு இராணுவ முகாம் போன்ற கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமுக்கு நேற்றையதினம் கடற்படை வீரர்கள்கொண்டு வரப்பட்டுள்ளனர்.

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 500 ற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெலிசறை கடற்படை முகாமினை சுத்தப்படுத்துவதற்காக குறித்த முகாமிலிருந்து வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு 174 கடற்படை உத்தியோகத்தர்களும், பெரியகட்டில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு 102 கடற்படை வீரர்கள் என மொத்தமாக 276 பேர் 40க்கும் மேற்பட்ட பேருந்துகளின் மூலம் நேற்று இரவு கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.