வாக்களிக்க வந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் !

66

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வரும்நிலையில், கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அருகே நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தையடுத்து , கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி 125-இல் தேர்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் , குறித்த சம்பவம் தொடர்பில் பாஜக – திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஒன்றையொன்று குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவே முழு பொறுப்பு என்று மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். மேலும் அவர் ,இன்று நடைபெற்ற சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவே முழு பொறுப்பு. . மத்திய படைகள் மீது குற்றம் சுமத்த முடியாது என்றும் ஏனெனில், உள்துறை அமைச்சரின் உத்தரவின் பேரிலேயே அவர்கள் செயல்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார் .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: