’வாழ்த்துக்கள் நட்டு’ என்று தமிழில் வாழ்த்திய வெள்ளைக்காரர்!

200

தமிழகத்தைச் சேர்ந்த கிரிகெட் வீரர் நடராஜனை அவுஸ்திரேலிய கிரிகெட் வீரர் ஒருவர் தமிழில் வாழ்த்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர், “வாழ்த்துகள் நட்டு” என தமிழிலேயே வாழ்த்துத் தெரிவித்து பேச்சை தொடங்கினார்.

அதன் பின் “நீங்கள் உண்மையாகவே ஒரு சிறந்த வீரர். நீங்கள் மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒரு அருமையான மனிதர். எங்கள் அணியில் நீங்கள் இருப்பதை அனைவரும் விரும்புகிறோம். வாழ்த்துகள்” என்றார் வார்னர்.

நடராஜன் குறித்த மற்றொரு கேள்வியின் போது, “நான் நடராஜனின் அணித் தலைவராக இருப்பது என் அதிர்ஷ்டம். அவர் ஓர் அருமையான மனிதர். மிகவும் தன்மையானவர். அவர் அருமையான திறன் படைத்தவர். ஐபிஎல் 2020 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிவிட்டு, தன் மனைவியின் பிரசவத்துக்குக் கூட செல்லாமல், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய அணியின் வலைப் பந்து வீச்சாளராகச் சென்று, அனைத்து ரக போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார். எவ்வளவு பெரிய சாதனை இது” என பாராட்டியிருக்கிறார் வார்னர்.

அதே போல செய்தியாளர் கேட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும் போது. “நடராஜனுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஐபிஎல் 2021-ல் நடராஜன் என்ன செய்யவிருக்கிறார் என்பதைக் காண ஆவலோடு இருக்கிறேன். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியும். சூழ்நிலைக்கேற்ப எப்படி பந்து வீச வேண்டும் என்பதை அவர் அறிவார்” என புகழ்ந்து தள்ளிவிட்டார் டேவிட் வார்னர்.

“நேற்று நடராஜனுக்கு, அவரது ஊர் மக்கள் வழங்கிய வரவேற்பை நேரடியாகப் பார்த்தோம். அதைப் பார்க்க அத்தனை பெருமையாக இருந்தது” எனக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேனான டேவிட் வார்னர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: