விட்டமின்-D  சத்து குறைபாடு கொண்டவர்களின் உயிரை அதிக அளவில் கொரோனா வைரஸ் காவு வாங்கியிருப்பது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிரை வேகமாக கொன்று வருகின்றது .

கொரோனா  வைரஸை கட்டுப்படுத்த ஒரு பக்கம் மருத்துவ விஞ்ஞானிகள் தடுப்பூசி மற்றும் குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இன்னொருபுறம், கொரோனா வைரஸ் எப்படிப்பட்டவர்களை தாக்குகின்றது? என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை முறைகளை மாற்றி உயிரிழப்பை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த விரிவான ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

நோயெதிர்ப்புச்  சக்தி இல்லாத முதியவர்கள் உயிரை கொரோனா வைரஸ் எளிதில் தனக்கு இரையாக்கிக்கொள்கின்றது, என்பது தொடக்கத்திலேயே கண்டறியப்பட்ட உண்மை.

இரு வாரங்களுக்கு முன்பு 120 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவர்களில் 5-ல் ஒருவர் கொரோனா தொற்றின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழக்கிறார்கள்  என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here