வித்தியாசமான முகத்துடன் காணப்பட்ட வௌவால்

0
55

நாய் முகத்துடன் உள்ள வௌவால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தை கைலோ (@emotionaolpedant) என்பவர் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். 

“இதுவரை பல வித்தியாசமான வௌவால் படங்களைப் பதிவிட்டிருக்கிறோம். 

அந்த வகையில், பட்டிகோஃபர் எபலெட்டெட் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தின்னி வவ்வாலான இது நாய் முகத்துடன் பறந்து கொண்டிருக்கிறது ” என்று தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இதுவரை 23  ஆயிரத்து 300 பேருக்கும் மேல் இந்த புகைப்படத்தை லைக் செய்திருக்கிறார்கள். 

5 ஆயிரத்து 400 பேர் ரீடுவிட் செய்திருக்கிறார்கள். 

பலரும் இதுபோன்ற வித்தியாசமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 

இந்த வகை வௌவால் இனங்கள் தென் ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதிகளில் வசிக்கின்றன. 

குறிப்பாக ஐவரி கோஸ்ட், கானா, லிபெரியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன.