விலங்குகளுக்கான முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த நாடு?

112

உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை, விலங்குகளுக்காக உருவாக்கிய நாடாக ரஷ்யா அறிவிக்கப்பட்டுள்ளது.

விலங்குகளின் பாதுகாப்பிற்காக, கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்ட புதிய தடுப்பூசி,பெடரல் மையத்தால் உருவாக்கப்பட்டது.

ஆரம்பகட்ட சோதனைகளின் போது இந்த தடுப்பூசி எவ்வித பக்க விளைவுகளையும் காட்டவில்லை.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் ஆரம்பமாகிய கார்னிவாக்-கோவின் மருத்துவ பரிசோதனைகளில், நாய்கள், பூனைகள், ஆர்க்டிக் நரிகள், மிங்க், நரிகள் மற்றும் ஏனைய விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.

குறித்த தடுப்பூசி சோதனையில் முடிவு பாதிப்பில்லை என்பதோடு விலங்குகள் மற்றும் அதிக நோயெதிர்ப்பு செயல்பாடுகளைக் வெளிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசிகள் பாரியளவில் உற்பத்தி செய்யப்படலாம் என ரஷ்யாவின் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் சிமியன் குரங்குகள், பூனைகள் ஆகிய செல்லப்பிராணிகளையும் பாதிப்பதாக  கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவும் பின்லாந்தும் கொரோனா வைரஸின் மாற்ற விகாரங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசிகளை உருவாக்க முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: