விளையாட்டில் சச்சின் செய்த தில்லுமுல்லு – கடைசியில் இவரும் இப்படி மாறிட்டாரே!

0
56

கிரிக்கெட் உலகின் மாஸ்டர் பிளாஸ்டர் ஆக திகழ்பவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். தனது 16 வயதிலிருந்து கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்து தற்போது ஓய்வில் உள்ளார். பிரபலங்கள் இந்த ஊரடங்கு காலத்தில் புது விதமான பல சேலஞ்சுகளை உருவாக்கி வருகின்றனர். மேலும், தனக்கு பிடித்த மற்றவரையும் அவ்வாறு செய்ய சொல்லி சேலஞ்சு செய்கின்றனர். சமூக வலைத்தளத்தில் தற்போது இந்த விஷயங்கள் மிகவும் சாதாரணமாக ஆகிவிட்டன.

கிரிக்கெட் முன்னாள் வீரர் ஆன யுவராஜ் அவர்கள் கண்ணை கட்டி கொண்டு பந்தாடுவது போல ஒரு போட்டியை உருவாக்கி அதை சச்சின் அவர்களையும் செய்ய சொல்லி சேலஞ்சு செய்துள்ளார். சச்சின் அவர்களும் தனது கண்ணை கட்டி கொண்டு அந்த சேலஞ்சு ஐ பூர்த்தி செய்துள்ளார். ஆனால் சச்சின் தனது கண்களை முழுமையாக மூடிக்கொள்ள வில்லை. தில்லு முள்ளு செய்து ஜெயித்துள்ளார். இவரது இந்த வீடியோ வை அவரே தந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.