வீட்டில் மூவர் இருந்த நிலையில் தீ வைத்த விஷமிகள்

0
220

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா மேற்குப் பிரிவிலுள்ள வீடொன்றுக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்ட சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் மூவர் இருந்த நிலையில் குறித்த வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதன்போது,  யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையிலும் குறித்த மண் வீட்டின் மேற்கூரை,  வீட்டிலிருந்த பொருள்கள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here