• Mar 29 2024

harsha / Dec 14th 2022, 5:03 pm
image

Advertisement

திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் "பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம்" என்ற தொனிப்பொருளில்  16ம் நாள் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு அதன் இறுதி நாளான இன்று  திருகோணமலையில் மரதன் ஓட்டப் பந்தயம் இடம்பெற்றது.

கப்பல்துறையிலிருந்து ஆரம்பமாகி திருகோணமலை நகர்வரை இவ் மரதன் ஓட்டப்பந்தம் வந்தடைந்தது.இதில் சுமார் 30 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

 நிகழ்வின் முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் B.H.M ஜயவிக்கிரம கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.

திருகோணமலை மாவட்ட பெண்கள் வலயமைப்பானது 16 நாள் செயல்முனைவினை ஆரம்பித்து பெண்கள் உரிமை, பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் ,அரச உத்தியோகத்தர்கள் ,சமூக அமைப்பினர் பல்வேறு பிரிவினருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 


திருகோணமலையில் மரதன் ஓட்டம் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் "பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம்" என்ற தொனிப்பொருளில்  16ம் நாள் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு அதன் இறுதி நாளான இன்று  திருகோணமலையில் மரதன் ஓட்டப் பந்தயம் இடம்பெற்றது.கப்பல்துறையிலிருந்து ஆரம்பமாகி திருகோணமலை நகர்வரை இவ் மரதன் ஓட்டப்பந்தம் வந்தடைந்தது.இதில் சுமார் 30 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். நிகழ்வின் முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் B.H.M ஜயவிக்கிரம கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.திருகோணமலை மாவட்ட பெண்கள் வலயமைப்பானது 16 நாள் செயல்முனைவினை ஆரம்பித்து பெண்கள் உரிமை, பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் ,அரச உத்தியோகத்தர்கள் ,சமூக அமைப்பினர் பல்வேறு பிரிவினருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement