05.07.2020 இன்றைய ராசிபலன்

0
67

மேஷராசி அன்பர்களே
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபராசி அன்பர்களே
சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பி கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

மிதுனராசி அன்பர்களே
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்னணு மின்சார பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். தாய்வழி ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகராசி அன்பர்களே
சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல
செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். மதிப்பு உயரும் நாள்.

சிம்மராசி அன்பர்களே
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும் . செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். கனவு நனவாகும் நாள்.

கன்னிராசி அன்பர்களே
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய் வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். இப்போதுதேடிய வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளி போன காரியங்கள் முடியும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்

துலாராசி அன்பர்களே
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பல பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.

விருச்சிகராசி அன்பர்களே
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்ற பொலிவுகூடும். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். அலுவலகத்தில் மரியாதை கூடும்.தடைகள் உடைபடும் நாள்.

தனுராசி அன்பர்களே
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். சின்ன சின்ன பிரச்சினைகள் அதிகமாகும். நீங்கள் எதை பேசினாலும் அதை எல்லோரும் தவறாக புரிந்து கொள்வார்கள். தலைசுற்றல் முழங்கால் வலி வந்து நீங்கும். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். இடம் ,பொருள், ஏவல்அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மகரராசி அன்பர்களே
கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள் .

கும்பராசி அன்பர்களே
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுப்படுத்து
வீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். இனிமையான நாள்.