மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம், குற்றப் புலனாய்வு திணைக்களம் சுமார் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலிமுகத்திடலிலும் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 3 மணியளவில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான அவர், இன்று அதிகாலை ஒரு மணியளவில் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலிமுகத்திடலிலும் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
- பாராளுமன்ற அமர்வு சற்றுமுன் ஆரம்பம்!
- எரிபொருள் கோரி மக்கள் போராட்டம் – மருதானையில் போக்குவரத்து முடக்கம்!
- கோட்ட கோ கம தாக்குதலுக்கு நீதி கோரி போராட்டத்தில் குதிக்கவுள்ள தொழிற்சங்கங்கள்
- இனவிடுதலையை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி” மாபெரும் எழுச்சிப் பேரணி புதுக்குடியிருப்பிலிருந்து ஆரம்பம்!
- வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்