• Sep 29 2024

10 ஆயிரம் வீடுகள்: இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்திட்ட உடன்படிக்கை!samugammedia

Tamil nila / Oct 11th 2023, 6:49 pm
image

Advertisement

இலங்கைக்கு பத்தாயிரம் வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்கும் உடன்படிக்கையில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.



இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்,ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், இந்திய தூதுக்குழு பிரதிநிதிகள் மற்றும் இலங்கை பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும்,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சற்று முன்னர் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கை இடையேயான உறவை மேம்படுத்தும் நோக்கில் விரிவான கலந்துரையாடல்களில் இருவரும்  ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

10 ஆயிரம் வீடுகள்: இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்திட்ட உடன்படிக்கைsamugammedia இலங்கைக்கு பத்தாயிரம் வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்கும் உடன்படிக்கையில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்,ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.மேலும், இந்திய தூதுக்குழு பிரதிநிதிகள் மற்றும் இலங்கை பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்புஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும்,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சற்று முன்னர் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.ஜனாதிபதி செயலகத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.இந்த பேச்சுவார்த்தைகளின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.அத்துடன், இந்த சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கை இடையேயான உறவை மேம்படுத்தும் நோக்கில் விரிவான கலந்துரையாடல்களில் இருவரும்  ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement