• Apr 24 2024

பக்கெட்டுகளில் சேமிக்கப்பட்ட 10,000 மனித மூளைகள்- வியக்க வைக்கும் காரணம்!samugammedia

Sharmi / Apr 1st 2023, 2:23 pm
image

Advertisement

டென்மார்க்கில் உள்ள தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தில் பல வெள்ளை நிற பக்கெட்களில் ஃபார்மால்டிஹைட் உதவியுடன்  சேமிக்கப்பட்டுள்ளதுடன், அதில்  9,479 மனித மூளைகள் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தக் காலகட்டத்தில் மூளைகளின் செயல்பாடு தொடர்பாக மருத்துவத்துறைக்குப் பெரியளவிலான விவரங்கள் தெரியாமையால் மூளைகளைச் சேமித்து வைத்து எதிர்கால ஆய்வுக்குப் பயன்படுத்தினால் என்ன என்ற யோசனை ஏற்பட்டமையே மாபெரும் மூளை சேமிப்பகத்தின் பின்னணியாகக் கூறப்படுகிறது.

."உலகில் உள்ள மிகப் பெரிய மூளை சேமிப்பகமாக இது அமைவதுடன் 1945-1980 வரை சுமார் 10,000 மூளைகள் இங்கு சேமிக்கப்பட்டுள்ளன. அதுவும் பிரேத பரிசோதனை முடிந்ததுமே மூளையைத் தனியாக எடுத்து பக்கெட்டில் சேமித்துள்ளனர் என்று மூளை சேமிப்பகத்தைச் சேர்ந்த நோயியல் நிபுணரான மார்ட்டின் வயர்ன்ஃபெல்ட் நீல்சன் கூறியுள்ளார்.

எனினும் 1990 இல் மனித மூளைகளை ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்று டேனிஷ் நெறிமுறைகள் கவுன்சில் தீர்ப்பளித்த பின்னர்  மூளை சேமிப்பகம் தொடர்பாக சமூகத்தில் நடந்து வந்த விவாதம் முடிவுக்கு வந்ததாகக் கூறிய மார்ட்டின் வயர்ன்ஃபெல்ட் நீல்சன், "மனரீதியிலான நோய்கள் குறித்து மேலும் அறிந்துகொள்வதற்கு இந்த ஆராய்ச்சி மிகவும் உதவிகரமாக இருக்கும்" என்றும் கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக வரலாற்று ஆய்வாளரான எஸ்பெர் வாச்சிவ் கவ் , "ஆய்வகத்தின் உள்ளே என்ன நடக்கிறது என்று வெளியிலுள்ளவர்கள்  யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. குறிப்பிட்ட சிகிச்சைக்கு நோயாளி  இசைவு தெரிவிக்காமலேயே சிகிச்சையளிக்கப்படலாம் என்பதுடன் அந்தக் காலத்தில் நோயாளிகள் பிற மக்களைப் போல் சமமாக மதிக்கப்படவில்லை," என்றும்  கூறியுள்ளார்.

டிமென்ஷியா, மன அழுத்தம் போன்ற பல்வேறு உடல் நலமின்மை தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கு இந்த மூளைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் .  தற்போது 4 ஆய்வுகளுக்கு இந்த மூளைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.


பக்கெட்டுகளில் சேமிக்கப்பட்ட 10,000 மனித மூளைகள்- வியக்க வைக்கும் காரணம்samugammedia டென்மார்க்கில் உள்ள தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தில் பல வெள்ளை நிற பக்கெட்களில் ஃபார்மால்டிஹைட் உதவியுடன்  சேமிக்கப்பட்டுள்ளதுடன், அதில்  9,479 மனித மூளைகள் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தக் காலகட்டத்தில் மூளைகளின் செயல்பாடு தொடர்பாக மருத்துவத்துறைக்குப் பெரியளவிலான விவரங்கள் தெரியாமையால் மூளைகளைச் சேமித்து வைத்து எதிர்கால ஆய்வுக்குப் பயன்படுத்தினால் என்ன என்ற யோசனை ஏற்பட்டமையே மாபெரும் மூளை சேமிப்பகத்தின் பின்னணியாகக் கூறப்படுகிறது. ."உலகில் உள்ள மிகப் பெரிய மூளை சேமிப்பகமாக இது அமைவதுடன் 1945-1980 வரை சுமார் 10,000 மூளைகள் இங்கு சேமிக்கப்பட்டுள்ளன. அதுவும் பிரேத பரிசோதனை முடிந்ததுமே மூளையைத் தனியாக எடுத்து பக்கெட்டில் சேமித்துள்ளனர் என்று மூளை சேமிப்பகத்தைச் சேர்ந்த நோயியல் நிபுணரான மார்ட்டின் வயர்ன்ஃபெல்ட் நீல்சன் கூறியுள்ளார். எனினும் 1990 இல் மனித மூளைகளை ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்று டேனிஷ் நெறிமுறைகள் கவுன்சில் தீர்ப்பளித்த பின்னர்  மூளை சேமிப்பகம் தொடர்பாக சமூகத்தில் நடந்து வந்த விவாதம் முடிவுக்கு வந்ததாகக் கூறிய மார்ட்டின் வயர்ன்ஃபெல்ட் நீல்சன், "மனரீதியிலான நோய்கள் குறித்து மேலும் அறிந்துகொள்வதற்கு இந்த ஆராய்ச்சி மிகவும் உதவிகரமாக இருக்கும்" என்றும் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக வரலாற்று ஆய்வாளரான எஸ்பெர் வாச்சிவ் கவ் , "ஆய்வகத்தின் உள்ளே என்ன நடக்கிறது என்று வெளியிலுள்ளவர்கள்  யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. குறிப்பிட்ட சிகிச்சைக்கு நோயாளி  இசைவு தெரிவிக்காமலேயே சிகிச்சையளிக்கப்படலாம் என்பதுடன் அந்தக் காலத்தில் நோயாளிகள் பிற மக்களைப் போல் சமமாக மதிக்கப்படவில்லை," என்றும்  கூறியுள்ளார். டிமென்ஷியா, மன அழுத்தம் போன்ற பல்வேறு உடல் நலமின்மை தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கு இந்த மூளைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் .  தற்போது 4 ஆய்வுகளுக்கு இந்த மூளைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement