தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1038 பேர் கைது..!

106

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக ஆயிரத்து 38 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களில் அதிகமானோர் குலியாப்பிட்டிய, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்தோடு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 29 ஆயிரத்து 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க கூடிய 14 இடங்களில் நேற்றைய தினம் 3ஆயிரத்து 111 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் அவற்றில் அநாவசியமாக பயணித்த 104 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: