12.05.2020 இன்றைய ராசிபலன்

0
31

மேஷராசி அன்பர்களே
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது வாய்ப் புகள் வரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

ரிஷபராசி அன்பர்களே
சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப பாக பேசுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங் கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபா ரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

மிதுனராசி அன்பர்களே
தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோ கத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.

கடகராசி அன்பர்களே
பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.

சிம்மராசி அன்பர்களே
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டா கும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

கன்னிராசி அன்பர்களே
நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு செலவுகள் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர் கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாராசி அன்பர்களே
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள் .வெற்றி பெறும் நாள்.

விருச்சிகராசி அன்பர்களே
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தினரை பற்றி யாரிடமும் குறைவாக பேச வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப் படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

தனுசுராசி அன்பர்களே
கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விருந்தினர் வருகை உண்டாகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.

மகரராசி அன்பர்களே
மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். தெளிவாகப் பேசுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கும்பராசி அன்பர்களே
சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத் தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மீனராசி அன்பர்களே
முன்கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப் புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.