மன்னாரில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 12 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 12 நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 02 ஆண்களும் 03 பெண்களும் அடங்குகின்றனர். 07 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

கைது செய்யப்பட்டவர்கள், வெடித்தலத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை