யாழில் 148 ஆவது உலக அஞ்சல் தின நிகழ்வு!

124

இன்று 148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு நிகழ்வுகளைத் திட்டமிட்ட போதிலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்திய அளவில் இதனைச் செய்ய வேண்டிய நிலையே எமக்கு கிடைத்துள்ளது என யாழ்ப்பாணம் பிரதம தபால் அதிபர் சாந்தகுமாரி பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இன்று காலை 9 மணியளவில் தேசிய கீதத்துடன் கொடி ஏற்றி, அதன்பின், சிற்றுண்டிகளை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

எமது அஞ்சல் அலுவலகம் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையிலும் மக்களுக்கு பெறுமதிக்க சேவையை ஆற்றியுள்ளது. இனிமேலும், சேவையாற்ற தயாராகவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனாவால் எமது உத்தியோகத்தர்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். அதனால் 14 நாட்கள் அலுவலகத்தை மூட வேண்டிய தேவையும் ஏற்பட்டிருந்தது. எனினும் நாம் எமது சேவையை ஆற்றியுள்ளோம். அத்தோடு, மக்களுக்கு தேவையான பெறுமதியான பொருட்கள், மருந்து வகைகளையும் வழங்கியுள்ளோம்.

அத்துடன், மட்டுப்படுத்தப்பட்ட வளங்களே அலுவலகத்தில் காணப்படுவதால், கணினி வசதிகள், பிறிண்டர் வசதிகள் எமக்கு வழங்கும் பட்சத்தில் மக்களுக்கு என்னும் திறம்பட சேவையை ஆற்ற முடியும் எனவும் திணைக்களத்துக்கு அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: