16.05.2020 இன்றைய ராசிபலன்

0
76

மேஷராசி அன்பர்களே
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.

ரிஷபராசி அன்பர்களே
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம்பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனராசி அன்பர்களே
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கடகராசி அன்பர்களே
சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். சில நேரங்களில் மறந்த சொந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

சிம்மராசி அன்பர்களே
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். விலை உயர்ந்த மின்னணு மின்சார பொருட்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னிராசி அன்பர்களே
சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். அமோகமான நாள்.

துலாராசி அன்பர்களே
புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப் பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகராசி அன்பர்களே
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். புதுவேலை கிடைக் கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசுராசி அன்பர்களே
குடும்பத்தினருடன் கலந்து பேசி பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித்தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.

மகரராசி அன்பர்களே
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைகள் உடைபடும் நாள்.

கும்பராசி அன்பர்களே
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். தலைசுற்றல் முழங்கால் வலி வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வாடிக் கையாளர்களால் மறைமுகப் பிரச்சினைகள் உருவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர் களுடன் பனிப்போர் வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மீனராசி அன்பர்களே
கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை கள் வந்து விலகும். எதிலும் நிதானம் தேவைப் படும் நாள்.