17.10.2020 இன்றைய ராசிபலன்

274

மேஷராசி அன்பர்களே
உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தைசாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபராசி அன்பர்களே
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். தொழில் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும்
நாள்.

மிதுனராசி அன்பர்களே
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள்.

கடகராசி அன்பர்களே
பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உழைப்பால் உயரும்
நாள்.

சிம்மராசி அன்பர்களே
கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்க
மாவீர்கள். துணிச்சலுடன் செயல்படும் நாள்.

கன்னிராசி அன்பர்களே
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மாற்றங்கள் நிறைந்த நாள்

துலாராசி அன்பர்களே
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

விருச்சிகராசி அன்பர்களே
எளிதாக முடிய வேண்டிய விஷயங்களைக் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள் .

தனுராசி அன்பர்களே
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள்.

மகரராசி அன்பர்களே
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களிடம் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

கும்பராசி அன்பர்களே
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் நீங்கி குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேளைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். தொழிலில் லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மீனராசி அன்பர்களே
சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்க பாருங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துகொள்ளுங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.