பல்வேறு நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் சுமுகமான முறையில் ஆரம்பமானது.
கொவிட்,பொருளாதார நெருக்கடிக்கும் மத்தியிலும் இன்றைய தினம் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலைகளுக்கு பரீட்சைக்காக வருகை தந்ததை காணமுடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயத்தில் க.பொ.த.சாதாரணப் பரீட்சைக்காக 14 இணைப்பு நிலையங்களும்,125 பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன் இப்பரீட்சைக்கு மாவட்டத்தில் இருந்து 17416 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இன்றைய தினம் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ரணிலால் ஒரு மாத காலத்திற்கு கூட ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாது! – ராஜித
- இனப்பிரச்சினையைத் தீர்த்திருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது! – சந்திரிக்காவின் சுடலை ஞானம்
- உலக செஸ் சம்பியனை உளவாளி ஆக்கிய ரஷ்யா!
- மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு!
- மூன்றாம் தரப்பினரிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம்! – எரிசக்தி அமைச்சர் கோரிக்கை
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்