2 ஆம் திகதி இறுதித் தீர்மானம்

0
61

இந்தியன் ப்றீமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்காக எதிர்வரும் 2 ஆம் திகதி ஐ.பி.எல் நிர்வாக சபை கூடி ஆராயவுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிற்போடப்பட்ட ஐ.பி.எல் தொடரை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 8 ஆம் திகதிவரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் ஐ.பி.எல் தொடரை நடத்துவதற்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் இருந்து அதிகாரபூர்வ கடிதம் கிடைத்ததாக எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பங்குதாரர்களுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த கூட்டத்தில் மேலும் பல தெளிவுபடுத்தல்கள் கிடைக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு சபை தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.