20 வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவோம் என்கிறார் சஜித்!

0
81

அரசியல் யாப்பின் 20 வது திருத்தச் சட்டம் தொடர்பாக பல்வேறுபட்ட எதிர்ப்புகள்  எழுந்துள்ள நிலையில்  சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டம் ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி  நடத்தியுள்ளது.கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் முக்கிய பிரமுகர் கலந்து கொண்டனர். 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மக்களிடம் எழுந்துள்ள நிலையில் அந்த அதிகாரத்தின் மேலும் சர்வ வல்லமை உள்ள அதிகாரமாக மாற்றும் வகையில் 20 வது திருத்த சட்டம் அமைந்துள்ளதாக சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார் .

இந்த சட்ட மூலத்தை நிறைவேற்ற அனுமதிக்க முடியாது என்றும் மக்களை ஒன்று திரட்டி எதிர்ப்பை வெளியிட உள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஹர்ஷ டி சில்வா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 

அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பன்னமை இருந்தாலும் மக்கள் அபிப்பிராய வாக்களிப்பு நடத்தப்படாமல் நிறைவேற்ற முடியாது என கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் கருத்து வெளியிட்டனர்.

சிவில் சமூக அமைப்புகளும் ,தேசிய சமாதான பேரவை,மாற்றுக கொள்கை மையம் ஆகிய அரச சார்பற்ற நிறுவங்களும் 20 வது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் திங்கட் கிழமை இடம்பெற்ற அமர்வின் போது 20 வது திருத்த சட்டம் ஜனநாயக விதி முறைகளுக்கு அமைவாக இல்லை  என குற்றம் சுமத்தியுள்ளனர்.