நுவன் சொய்சாவிற்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்..!

140

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் பயிற்றுவிப்பாளருமான நுவான் சொய்சா, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல்-எதிர்ப்பு விதிகளின் கீழான 3 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் அவர் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சுயாதீன ஊழல்-எதிர்ப்பு தீர்ப்பாயம் விசாரணைகளை நடத்தி வந்தது.

இதில், அவர் மீது முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது