• Mar 29 2024

வழுக்கை தலை குறித்து நீங்கள் நம்பும் 3 கட்டுக்கதைகள்!

Tamil nila / Feb 4th 2023, 10:03 pm
image

Advertisement

வழுக்கை தலைக்கு தீர்வு காண்பது என்பது விஞ்ஞானிகளுக்கு பல நூற்றாண்டுகளாக சவாலாக இருக்கிறது.

2,000் ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாவற்றுக்கும் பெரும் நம்பிக்கையாக இருந்த மதம் எனும் நம்பிக்கையில் இருந்து விலகி தனது அறிவியல் கண்ணோட்டத்தில் செயல்பட்ட நவீன மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸ், தலைமுடி அமைப்பு எப்படி செயல்படுகிறது மற்றும் முடி கொட்டுதலை மாற்றுவதற்கான வழிகளை சோதித்தார்.


ஆகவே, இன்றைக்கு நம் தலைமுடி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என மேலும் கூடுதலாக புரிந்திருக்கின்றோம். கூடுதலாக, தலையில் வழுக்கை ஏற்படுவதற்கு பல காரணங்கள் குறிப்பாக மரபியல் முதல் சூழல் வரை உள்ளன. இருந்தபோதிலும் முடி உதிர்வதற்கான காரணங்கள் எவை? என்பது பற்றி இன்னும் பல தவறான கருத்துகள் நிலவுகின்றன.


லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முடி உதிர்தல் மற்றும் உச்சந்தலை குறைபாடுகள் தொடர்பான மருத்துவ நிபுணரும் தோல் மருத்துவருமான கரோலின் கோ, "தலை வழுக்கையாக இருப்பது குறித்து மோசமாக நினைக்க தேவையில்லை," என்று கூறுகிறார்.



தற்போது, தலை வழுக்கையாவதைத் தவிர்க்க குறைந்தபட்சம் மூன்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட மாற்று வழிகள் உள்ளன.


முடி உதிர்தலுக்கு காரணமான சிக்கலான ரசாயன மற்றும் உயிரியல் அமைப்புகளால் அவை எதுவுமே 100% தீர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. ஆனால் அவை தலை வழுக்கையாவதை மெதுவாக்குகின்றன அல்லது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பச் செய்கின்றன.


மினாக்ஸிடில் - இது உச்சந்தலையில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் களிம்பு மற்றும் திரவ வடிவில் விற்கப்படும் ஒரு கலவை. சில முறைசாரா ஆய்வுகளில், மினாக்ஸிடிலின் குறைந்த அளவிலான வாய்வழி மாத்திரைகள் உதிர்ந்த முடிகளை மீண்டும் வளரச் செய்யும் என்ற முடிவுகள் கிடைத்துள்ளன. ஆனால் இந்த வடிவிலான மினாக்ஸிடில் பயன்பாடு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.


ஃபினாஸ்டெரய்ட் - இது வாய்வழியாக கொடுக்கப்படுகிறது. இது ஆண்களுக்கு வயதாகும்போது ஏற்படும் புரோஸ்டேட் சுரப்பி விரிவாக்கத்திற்கான சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது குறைந்த செறிவுகளில் முடி உதிர்தலைத் தடுக்க பயன்படுத்தப்படுகிறது.


அறுவை சிகிச்சைகள்: தலையில் முடி வளர்ச்சி உள்ள பகுதிகளில் இருந்து மயிர்க்கால்கள் அகற்றப்பட்டு, வளர்ச்சி இல்லாத பகுதிகளில் ஊற்றப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு மாற்று நுட்பங்கள் உருவாகியுள்ளன.


இந்த சமீபத்திய சிகிச்சைகளைப் பற்றி தவறான கருத்து இருப்பதாக மருத்துவர் கோ நம்புகிறார். "முடி மாற்று அறுவை சிகிச்சை ஒரு வேளை கடந்த காலத்தில் மோசமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று முடி மாற்று அறுவை சிகிச்சை சிறப்பாக இருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.


இந்த சிகிச்சைக்கு மிகவும் துல்லியத்தன்மை தேவைப்படுவதால் நல்ல கண் பார்வை உள்ளவர்களிடம் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளும்படி கோ பரிந்துரைக்கிறார்.


"இதில் நிறைய கலை இருக்கிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மயிர்க்கால்கள் அது இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு எப்படி வளர்ந்தது என்பதை நினைவில் கொண்டு புதிய இடத்தில் வளர்கின்றன" என்றும் அவர் கூறுகிறார்.


வழுக்கை தலை குறித்து நீங்கள் நம்பும் 3 கட்டுக்கதைகள் வழுக்கை தலைக்கு தீர்வு காண்பது என்பது விஞ்ஞானிகளுக்கு பல நூற்றாண்டுகளாக சவாலாக இருக்கிறது.2,000் ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாவற்றுக்கும் பெரும் நம்பிக்கையாக இருந்த மதம் எனும் நம்பிக்கையில் இருந்து விலகி தனது அறிவியல் கண்ணோட்டத்தில் செயல்பட்ட நவீன மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸ், தலைமுடி அமைப்பு எப்படி செயல்படுகிறது மற்றும் முடி கொட்டுதலை மாற்றுவதற்கான வழிகளை சோதித்தார்.ஆகவே, இன்றைக்கு நம் தலைமுடி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என மேலும் கூடுதலாக புரிந்திருக்கின்றோம். கூடுதலாக, தலையில் வழுக்கை ஏற்படுவதற்கு பல காரணங்கள் குறிப்பாக மரபியல் முதல் சூழல் வரை உள்ளன. இருந்தபோதிலும் முடி உதிர்வதற்கான காரணங்கள் எவை என்பது பற்றி இன்னும் பல தவறான கருத்துகள் நிலவுகின்றன.லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முடி உதிர்தல் மற்றும் உச்சந்தலை குறைபாடுகள் தொடர்பான மருத்துவ நிபுணரும் தோல் மருத்துவருமான கரோலின் கோ, "தலை வழுக்கையாக இருப்பது குறித்து மோசமாக நினைக்க தேவையில்லை," என்று கூறுகிறார்.தற்போது, தலை வழுக்கையாவதைத் தவிர்க்க குறைந்தபட்சம் மூன்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட மாற்று வழிகள் உள்ளன.முடி உதிர்தலுக்கு காரணமான சிக்கலான ரசாயன மற்றும் உயிரியல் அமைப்புகளால் அவை எதுவுமே 100% தீர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. ஆனால் அவை தலை வழுக்கையாவதை மெதுவாக்குகின்றன அல்லது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பச் செய்கின்றன.மினாக்ஸிடில் - இது உச்சந்தலையில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் களிம்பு மற்றும் திரவ வடிவில் விற்கப்படும் ஒரு கலவை. சில முறைசாரா ஆய்வுகளில், மினாக்ஸிடிலின் குறைந்த அளவிலான வாய்வழி மாத்திரைகள் உதிர்ந்த முடிகளை மீண்டும் வளரச் செய்யும் என்ற முடிவுகள் கிடைத்துள்ளன. ஆனால் இந்த வடிவிலான மினாக்ஸிடில் பயன்பாடு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.ஃபினாஸ்டெரய்ட் - இது வாய்வழியாக கொடுக்கப்படுகிறது. இது ஆண்களுக்கு வயதாகும்போது ஏற்படும் புரோஸ்டேட் சுரப்பி விரிவாக்கத்திற்கான சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது குறைந்த செறிவுகளில் முடி உதிர்தலைத் தடுக்க பயன்படுத்தப்படுகிறது.அறுவை சிகிச்சைகள்: தலையில் முடி வளர்ச்சி உள்ள பகுதிகளில் இருந்து மயிர்க்கால்கள் அகற்றப்பட்டு, வளர்ச்சி இல்லாத பகுதிகளில் ஊற்றப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு மாற்று நுட்பங்கள் உருவாகியுள்ளன.இந்த சமீபத்திய சிகிச்சைகளைப் பற்றி தவறான கருத்து இருப்பதாக மருத்துவர் கோ நம்புகிறார். "முடி மாற்று அறுவை சிகிச்சை ஒரு வேளை கடந்த காலத்தில் மோசமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று முடி மாற்று அறுவை சிகிச்சை சிறப்பாக இருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.இந்த சிகிச்சைக்கு மிகவும் துல்லியத்தன்மை தேவைப்படுவதால் நல்ல கண் பார்வை உள்ளவர்களிடம் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளும்படி கோ பரிந்துரைக்கிறார்."இதில் நிறைய கலை இருக்கிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மயிர்க்கால்கள் அது இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு எப்படி வளர்ந்தது என்பதை நினைவில் கொண்டு புதிய இடத்தில் வளர்கின்றன" என்றும் அவர் கூறுகிறார்.

Advertisement

Advertisement

Advertisement