31.05.2020 இன்றைய ராசிபலன்

0
109

மேஷராசி அன்பர்களே
எதிர்பாராத பணவரவுஉண்டு. பழைய உறவினர் நண்பர் களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத் தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபராசி அன்பர்களே
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வேற்றுமதத் தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்

மிதுனராசி அன்பர்களே
தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை பெருகும் நாள்.

கடகராசி அன்பர்களே
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. எதிலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு நுணுக்கங் களை கற்று கொள்வீர்கள். நினைத்தது நிறை வேறும் நாள்.

சிம்மராசி அன்பர்களே
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். தோற்றப்லிவுக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமுண்டு. மகிழ்ச்சியான நாள்.

கன்னிராசி அன்பர்களே
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று நடத்தி முடிப்பது நல்லது. அடுத்தவர்கள் மனசு புண்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

துலாராசி அன்பர்களே
திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகள் பிடிவாத மாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சகஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

விருச்சிகராசி அன்பர்களே
பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக் காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ் கௌர வம் கூடும் நாள்.

தனுசுராசி அன்பர்களே
கோபத்தை கட்டுப் படுத்துவதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய் வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரியபொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது ஏஜென்சிஎடுப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோ கத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக் கும் நாள்.

மகரராசி அன்பர்களே
கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

கும்பராசி அன்பர்களே
சந்திராஷ்டமம் தொடர்வ தால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என ஆதங்கப் படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மீனராசி அன்பர்களே
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய் வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புதுவேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத் தில் உங்களின் திறமை வெளிப்படும். நன்மை நடக்கும் நாள்.