• Mar 29 2024

இந்த ஆண்டில் 31,098 டெங்கு நோயாளர்கள் பதிவு: சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்! samugammedia

raguthees / May 8th 2023, 12:38 am
image

Advertisement

நாடளாவிய ரீதியில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்  31,098 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

டெங்கு நிலைமை மோசமடைய முன்னர் பல்வேறு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்  சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவிக்கையில்,  

இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிபுணர் அறிக்கை ஒன்றை வழங்குமாறு அமைச்சின் செயலாளருக்கு  பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

டெங்கு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஒருங்கிணைக்க ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்த சுகாதார அதிகாரிகளுடன் பணிக்குழு செயல்படும்.

கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 6,953 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் 6,500 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.

டெங்கு பரவாமல் தடுக்க நுளம்பு பரவும் இடங்களை அகற்றுதல், பாதுகாப்பு ஆடை அணிதல்  உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டில் 31,098 டெங்கு நோயாளர்கள் பதிவு: சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் samugammedia நாடளாவிய ரீதியில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்  31,098 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.டெங்கு நிலைமை மோசமடைய முன்னர் பல்வேறு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்  சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவிக்கையில்,  இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிபுணர் அறிக்கை ஒன்றை வழங்குமாறு அமைச்சின் செயலாளருக்கு  பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.டெங்கு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஒருங்கிணைக்க ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.தொற்று நோய்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்த சுகாதார அதிகாரிகளுடன் பணிக்குழு செயல்படும்.கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 6,953 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் 6,500 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.டெங்கு பரவாமல் தடுக்க நுளம்பு பரவும் இடங்களை அகற்றுதல், பாதுகாப்பு ஆடை அணிதல்  உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement