36 வருடத்திற்கு பின் பாக்கியராஜ் இயக்கத்தில் நடிக்கப்போகும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா ?

0
60

1983 -ம் ஆண்டு ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் முந்தானை முடிச்சு என்பது நமக்கு தெரிந்ததே இப்படம் வெளியாகி அப்போது திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றிப் படமானது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பின் இக்கதை கலம் அனைவரையும் கவர்ந்ததால் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆனது. ஊர்வசி, பூர்ணிமா பாக்யரஜ், கே.கே.சௌந்தர், தவக்களை சிட்டிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இத்திரைப்படம் 36 வருடங்களுக்கு பின்னர் தற்போது ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முந்தானை முடிச்சு ரீமேக்கில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். ஜே.எஸ்.பி. சதீஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.அதுமட்டுமில்லாமல் ,படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.