• Apr 18 2024

ஒரே மாதத்தில் 37 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் இந்தியாவில் முடக்கம்!

Chithra / Dec 22nd 2022, 4:43 pm
image

Advertisement


நவம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 37 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

விதிமீறலையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட, 37 லட்சம் கணக்குகளில், 10 லட்சம் கணக்குகள் பிறரின் எந்த வித புகாரும் இன்றி வாட்ஸ் ஆப் நிறுவனம் தாமாகவே கண்காணித்து முடக்கியுள்ளதாக தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணக்குகள் இந்திய அரசின் 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக முடக்கப்பட்டுள்ளன. விதியின்படி, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நிறுவனங்கள், புகார் மற்றும் அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 45 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை வெளியிட வேண்டும்.

அதன்படி, வாட்ஸ்-அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 1ம் திகதி முதல் 30 வரையிலான காலத்தில் விதிகளை மீறியதாக 37 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதம் முடக்கப்பட்ட வாட்ஸ் ஆப் கணக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஒரே மாதத்தில் 37 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் இந்தியாவில் முடக்கம் நவம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 37 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.விதிமீறலையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட, 37 லட்சம் கணக்குகளில், 10 லட்சம் கணக்குகள் பிறரின் எந்த வித புகாரும் இன்றி வாட்ஸ் ஆப் நிறுவனம் தாமாகவே கண்காணித்து முடக்கியுள்ளதாக தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கணக்குகள் இந்திய அரசின் 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக முடக்கப்பட்டுள்ளன. விதியின்படி, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நிறுவனங்கள், புகார் மற்றும் அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 45 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை வெளியிட வேண்டும்.அதன்படி, வாட்ஸ்-அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 1ம் திகதி முதல் 30 வரையிலான காலத்தில் விதிகளை மீறியதாக 37 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.கடந்த அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதம் முடக்கப்பட்ட வாட்ஸ் ஆப் கணக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement