4 வருட காதலியை திருமணம் செய்துகொண்ட பால் பாண்டியை பாருங்க ❕

0
54

‘கும்கி அஸ்வின்’ என்று அழைக்கப்படும் பிரபல காமெடி நடிகர் அஸ்வின் ராஜா தனது நான்கு வருட காதலியை இன்று திருமணம் செய்து கொண்டார்.ஆமாங்க ,அஸ்வின் ராஜா மற்றும் வித்யஸ்ரீ இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், அவர்களது குடும்பத்தினர் ஒப்புதலோடு சமீபத்தில் திருமண நிச்சயம் செய்துகொண்டனர். அதன்படி, அவர்களுக்கு இன்று சென்னை சூலைமேட்டில் உள்ள அஸ்வினின் வீட்டில் திருமணம் நடைபெற்றது.

‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான வி. சுவாமிநாதனின் மகன் தான் அஸ்வின் ராஜா. ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ என்ற படத்தில் ‘பால்பாண்டி’ எனும் கதாப்பாத்திரத்தில் மொட்ட ராஜேந்திரன் மகனாக நடித்து மிகவும் பிரபலமானார்.

அதை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த ‘கும்கி’ திரைப்படத்தில் ‘உண்டியல்’ கதாபாத்திரத்தில் நடித்து மேலும் புகழ் பெற்றார். பின் நெடுஞ்சாலை, நய்யாண்டி, தில்லு முல்லு, சகலகலா வல்லவன், சண்டி வீரன், தொடரி, மொட்ட சிவா கெட்ட சிவா, தமிழ்ப்படம் 2, தனுசு ராசி நேயர்களே என 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.வித்யஸ்ரீ கே.கே.நகரைச் சேர்ந்த ராஜசேகரின் மகள், அவர் அமெரிக்காவில் தனது M.S. முடித்துள்ளார்