மட்டக்களப்பில் மேலும் 4 பொலிஸ் நிலையங்கள்

159

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலதிகமாக புதிதாக 4 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு இந்த மாத இறுதியில் உத்தியோக பூர்வமாக திறப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் நிலையங்கள் இயங்கிவரும் நிலையில், மேலும் புதிதாக 4 பொலிஸ் நிலையங்கள் அமைப்பதற்காக பொலிஸ் மா அதிபரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புணானை பொலிஸ் சோதனை சாவடியாக இயங்கிவரும் சோதனைச்சாவடி புணானை காவல் நிலையமாகவும், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பிரிவிலுள்ள சந்திவெளி கேரக்காவெளிமடு பகுதில் சந்திவெளி பொலிஸ் நிலையமும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கொக்குவில் பொலிஸ் சோதனைச் சாவடியாக இயங்கிவரும் சோதனைச்சாவடி கொக்குவில் பொலிஸ் நிலையமும், காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்ப்பலா பிரதேசத்தில் கர்ப்பலா பொலிஸ் நிலையமுமாக 4 புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

இந்த அனுமதியையடுத்து அந்த பகுதிகளுக்கு உதவி பொலிஸ் அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சென்று இடங்களை பார்வையிட்டு அந்த பகுதிகளில் பொலிஸ் நிலைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பொலிஸ் பிரிவு எல்லைகள் தீர்மானிக்கப்பட்டு தற்காலிகமாக இயங்க ஆரம்பித்துள்ளது.

இந்த மாதக் கடைசியில் சம்பிரதாய பூர்வமாக பொலிஸ் நிலையம் திறப்பதற்காக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: