• Apr 25 2024

400 சதுர அடியில் நீச்சல் குளம்; ஆறு கோடி செலவில் சொகுசு வில்லா வாங்கிய கிரிக்கெட் வீரர் கோலி! SamugamMedia

Chithra / Feb 25th 2023, 5:21 pm
image

Advertisement

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி ரூ.6 கோடி செலவில் புதிய வில்லா ஒன்றை வாங்கியுள்ளார்.

மகாராஷ்டிராவின் அலிபாக்கில் உள்ள அவாஸ் கிராமத்தில் விராட் கோலி வாங்கியுள்ள சொகுசு வில்லாவின் விலை ஆறு கோடி என்று கூறப்படுகிறது.

சுமார் 2,000 சதுர அடியில் உள்ள அந்த வில்லாவுக்காக முத்திரைத் தொகையாக மட்டும் ரூ.36 லட்சத்தை கோலி செலுத்தியுள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ள இந்த வில்லாவில் 400 சதுர அடி நீச்சல் குளம் உள்ளது.


இந்தப் பகுதியில் ஒரு சதுர அடியின் சராசரி விலை ரூ.3000 முதல் ரூ.3,500 வரை இருக்கும் என்றும், வார இறுதி நாட்களில் பெரும் பணக்காரர்கள் இங்கு வந்து பொழுதை கழிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

கோலி வாங்கியுள்ள இந்த வில்லா-வின் உட்புறத்தை நடிகர் சஞ்சய் கானின் மகள் சுசானே கான் வடிவமைத்துள்ளார்.


கடந்த ஆண்டு செப்டம்பரில் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து ஆடம்பரமான பங்களாவை வாங்கியிருந்தார். 

அதன் மதிப்பு ரூ.19.24 கோடி மற்றும் முத்திரைக் கட்டணத்தை அவர் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.    


400 சதுர அடியில் நீச்சல் குளம்; ஆறு கோடி செலவில் சொகுசு வில்லா வாங்கிய கிரிக்கெட் வீரர் கோலி SamugamMedia இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி ரூ.6 கோடி செலவில் புதிய வில்லா ஒன்றை வாங்கியுள்ளார்.மகாராஷ்டிராவின் அலிபாக்கில் உள்ள அவாஸ் கிராமத்தில் விராட் கோலி வாங்கியுள்ள சொகுசு வில்லாவின் விலை ஆறு கோடி என்று கூறப்படுகிறது.சுமார் 2,000 சதுர அடியில் உள்ள அந்த வில்லாவுக்காக முத்திரைத் தொகையாக மட்டும் ரூ.36 லட்சத்தை கோலி செலுத்தியுள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ள இந்த வில்லாவில் 400 சதுர அடி நீச்சல் குளம் உள்ளது.இந்தப் பகுதியில் ஒரு சதுர அடியின் சராசரி விலை ரூ.3000 முதல் ரூ.3,500 வரை இருக்கும் என்றும், வார இறுதி நாட்களில் பெரும் பணக்காரர்கள் இங்கு வந்து பொழுதை கழிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.கோலி வாங்கியுள்ள இந்த வில்லா-வின் உட்புறத்தை நடிகர் சஞ்சய் கானின் மகள் சுசானே கான் வடிவமைத்துள்ளார்.கடந்த ஆண்டு செப்டம்பரில் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து ஆடம்பரமான பங்களாவை வாங்கியிருந்தார். அதன் மதிப்பு ரூ.19.24 கோடி மற்றும் முத்திரைக் கட்டணத்தை அவர் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.    

Advertisement

Advertisement

Advertisement