உலகில் எங்குமே இல்லாத தமிழர்களின் காய்! இவ்வளவு நன்மைகளா?

113

1.நீரிழிவு நோய்நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

2.மஞ்சள் காமாலைமஞ்சள்காமாலை பிரச்னை உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த காயை தினந்தோறும் அவர்களது உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்

3.உடல் எரிச்சல், உடல் எரிச்சல் பிரச்னை உள்ளவர்கள் அதலக்காயை தினந்தோறும் தங்களது உணவில் சேர்த்து வந்தால், உடல் எரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

4.குடற்புழுகுடற்புழு பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் உள்ள சத்துக்கள் நமது வயிற்று பிரச்சனையை தீர்ப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இது வயிற்றில் காணப்படும் கிருமிகளை அளிப்பதோடு, குடற்புழு பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

பாகற்காயைப் எப்படி பொரியல் மறறும குழம்பு வைத்து சாப்பிடுகிறோமோ, அப்படி இந்தக் காயை சாப்பிட வேண்டும்.

அதலக்காய் பற்றிய விளக்கம்: அதலகாயை பொறுத்தவரையில், உலகத்தில் எந்த நாட்டிலும் விளையாத ஒரு காய். ஆனால், இந்த காய் நம் தமிழ்நாட்டில் மட்டும் விளையக்கூடியது. இது, தமிழ்நாட்டில் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அதிகமாக கிடைக்கும்.

இந்தக் காயில் பல வகையான மருத்துவக் குணங்கள் உள்ளது. இந்தக் காயில், துத்தநாகம், வைட்டமின்சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது. இந்தக்காய் அதிகமாக மழைக்காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியது. இந்தக் காய் மூலிகை செடி கொடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இதன் விதையை எடுத்து நாம் வைத்தாலும் இந்த செடி வலராதாம். ஏன்னென்றால் இந்த செடி மழைக்காலங்களில் தானாக வளரக் கூடிய ஒரு செடி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: