யூரியூப் சனல்களில் இனிமேல் இப்படியெல்லாம் செய்யமுடியாது!

63

யூட்யூப் போன்ற சமூக ஊடக தளங்களை சர்ச்சைக்குரிய செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்க முயன்றால் கடும் நடவடிக்கை பாயும் என்று சென்னை நகர காவல்துறை ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் பேசிய அவர், பெண்களின் மதிப்பைக் குலைக்கும் வகையிலும் பாலியல் ரீதியிலான உணர்வுகளை தூண்டவும் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் செயலை அனுமதிக்க முடியாது என்றார்.

மேலும் இதுபோன்ற குழுக்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய அவர், ’சென்னை டோல்க்ஸ்’ யூரியூப் குழுவினர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் சட்டத்துக்கு புறம்பானதாக அமையும் அந்த சேனல் குழுவினரின் செயல்பாடு குறித்து யூட்யூப் நிறுவனத்துக்கு கடிதம் எழுதுவோம் என்றும் இதுபோன்ற செயல்பாடு யூட்யூப் பயன்பாட்டு கொள்கைகளுக்கும் புறம்பானது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான செயலை யூரியூப் நிறுவனமே ஏற்க மாட்டாது என தெரிவித்த அவர், இதுபோன்ற சேனல்களை யூட்யூப் முடக்கும் என்று எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: