நடுவானில் தீப்பிடித்த விமானம்! பயணிகள் அல்லோலகல்லோலம்!!

63

நடு வானில் பயணம் செய்துகொண்டிருந்த விமானமொன்று திடீரென தீப்பிடித்ததனால் பயணிகள் அனைவரும் அல்லோலகல்லோலப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

ஆனாலும் அந்த விமானத்தை தனது பொறுமையாலும் சாதுரியத்தாலும் விமானி பத்திரமாக தரையிறக்கியுள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவின் யுனைடெட் (United Airlines) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Boeing 777 ரக பயணிகள் விமானம் டென்வர் நகரில் இருந்து ஹொனலுலு நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

இதில், 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் பயணம் செய்த நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் 15 ஆயிரம் அடி உயரத்தில் வலதுபக்க இன்ஜினில் தீப்பிடித்துள்ளது.

இதனால் விமானம் உடனடியாக டென்வர் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டதுடன் டென்வார் விமான கட்டுப்பாட்டு அறைக்கு Mayday சமிக்ஞையை கொடுத்து அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.

அதன்படி டென்வர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டதுடன் அவசர அவசரமாக மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

ஆனாலும் குறித்த விமானம் அங்கு தரையிங்க முன்னரே அதனது வலப்பக்க இன்ஜினில் பற்றிய தீ வேகமாக பரவி, சில பாகங்கள் உடைந்து தரையில் விழுந்துள்ளன.

ஆனாலும் சிறிதும் பதற்றப்படாமல் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை டென்வர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கியதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: