அழகான சருமத்திற்கு அற்புத பலன் அளிக்கும் ஐந்து பொருட்கள்!

இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னதாக இந்த அற்புதமான பொருட்களை சருமத்தில் பூசி, காலையில் எழுந்த பிறகு கழுவினால் சருமம் ஆரோக்கியத்துடன் அழகாக மிளிரும்…

அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்று சொல்லும் இயற்கையான பொருட்களை நாம் சரியான முறையில் பயன்படுத்தினால், அவை ஆரோக்கியத்தையும் கொடுக்கும். பல இயற்கையான பொருட்களை உண்பது உடலின் உள் உறுப்புகளுக்கு ஆரோக்கியம் என்றால், அவற்றை சருமத்தில் பயன்படுத்தினால் அழகு மிளிரும். இரவில் முகத்தில் என்ன தடவினால் பட்டு போன்ற சருமம் கிடைக்கும்? அதை எப்படி பயன்படுத்துவது என பல கேள்விகள் அவ்வப்போது எழுகின்றன. ஆனால் கிடைக்கும் பதில் அனைவருக்குமானதாக இருக்காது.

ஏனென்றால், சருமத்தின் தன்மை, ஆளுக்கு ஆள் மாறுபடுவதால், சரும பராமரிப்புக் குறிப்புகளும் ஆளுக்கு ஆள் மாறுபடும். வறண்ட சருமம் உள்ளவர்களின் முகத்திற்கு ஒத்து வரும் குறிப்புகள் எண்ணெய் பசை கொண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு எதிர்மறையான பலனையேக் கொடுக்கும்.

எனவே, இரவில் எந்த வகை சருமத்தைக் கொண்டவர்கள் எதை பயன்படுத்தினால் நன்மை பெறலாம் என்பதை தெரிந்துக் கொண்டால், அதன் பயன்களை எளிதாக பெறலாம்.

தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த எண்ணெயில் ஒமேகா -3 மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன, அவை சருமத்திற்கு நன்மை பயக்கும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தேங்காய் எண்ணெய் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை வெளிக் கொண்டு வருகிறது. தேங்காய் எண்ணெயில் சில பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகத்தில் உள்ள பாக்டீரியாவைக் குறைத்து, சருமத்தை ஆரோக்கியமாக்குகின்றன.

தேன் முகத்திற்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும். தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தை உள்ளே இருந்து சுத்தப்படுத்தவும் குணப்படுத்தவும் உதவுகிறது. கூடுதலாக, இது சருமத்தில் உள்ள கறைகளை அகற்ற உதவுகிறது. எனவே, தேனை எடுத்து முகத்தில் தடவவும். இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

கற்றாழை ஜெல் முகத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். கற்றாழையின் சதைப் பகுதியை பயன்படுத்தினால், முகத்தின் ஈரப்பதம் பராமரிக்கப்படும். அதோடு, பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படாமலும் உதவும். கற்றாழையில் உள்ள குணப்படுத்தும் பண்புகள், சேதமடைந்த சருமத்தை உள்ளே இருந்து சரிசெய்து, மெருக்கூட்டும். கற்றாழை மட்டுமே, அனைத்து வகை சருமத்தினருக்கும் நன்மை பயக்கும்.

ரோஸ் வாட்டர் என்று அறியப்படும் பன்னீர் சருமத்திற்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும். இரவில் தடவினால் சருமம் சுத்தமாகும். மேலும், அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்கும் பன்னீர், உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும்.

அவக்கோடா பழத்தை அரைத்து சருமத்தில் தடவினால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இது அனைத்து சரும வகைகளுக்கும் நன்மை பயக்கும். வறண்ட சருமம், எண்ணெய் சருமம் மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமம் என அனைவருக்கும் உகந்த பழம் இது.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை