• Mar 29 2024

சுற்றுலாப் பயணிகளுக்கு 5 லட்சம் இலவச விமான டிக்கெட்கள்... அசத்திய ஹாங்காங்!

Tamil nila / Feb 2nd 2023, 9:39 pm
image

Advertisement

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக ஹாங்காங் ஏர்லைன்ஸ் அதிரடியாக 5,00,000 விமான டிக்கெட்டுகளை இலவசமாக அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.


சீனாவின் அருகே அமைந்திருக்கும் தீவு நாடு, ஹாங்காங். இங்கு, சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கக்கூடிய பகுதிகள் நிறைய உள்ளன. குறிப்பாக, ஸ்டார் பெர்ரி படகுச் சவாரி, ஹாங்காங் ஸ்கைலைன், விக்டோரியா பீச், டியான் டான் புத்தர் சிலை, வோங் டான் சின் கோயில் உள்ளிட்ட பகுதிகள் பிரபலமான சுற்றுலாப் பகுதிகளாகும். இவற்றைக் கண்டுகளிப்பதற்காக உலகம் முழுவதிலிமிருந்து சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பர். 


இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஹாங்காங் தீவும் பாதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கும், விமானங்கள் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது.


தற்போது கொரோனா தொற்று குறைந்ததையடுத்து கட்டுப்பாடுகளை ஹாங்காங் அரசு படிப்படியாகத் தளர்த்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த நிலையில், அதனில் இருந்து மீண்டுவருவதற்காக அவர்களைக் கவரும் வண்ணம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. 


ஆம், அதன்படி, ஹாங்காங் ஏர்லைன்ஸ் நிறுவனம், 5,00,000 விமான டிக்கெட்களை இலவசமாக வழங்கவுள்ளது. இதுகுறித்து கடந்த அக்டோபர் மாதமே செய்தி வெளியான நிலையில், தலைமை நிர்வாகியான ஜான் லீ, அதற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.


இதுகுறித்து அவர், “கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 5 லட்சம் இலவச விமான டிக்கெட்கள் வழங்கப்பட உள்ளது” எனத் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகள் ஹாங்காங் ஏர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனங்களுடன் இணைந்து தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் பயணிகளின் தேர்வு விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளுக்கு 5 லட்சம் இலவச விமான டிக்கெட்கள். அசத்திய ஹாங்காங் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக ஹாங்காங் ஏர்லைன்ஸ் அதிரடியாக 5,00,000 விமான டிக்கெட்டுகளை இலவசமாக அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.சீனாவின் அருகே அமைந்திருக்கும் தீவு நாடு, ஹாங்காங். இங்கு, சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கக்கூடிய பகுதிகள் நிறைய உள்ளன. குறிப்பாக, ஸ்டார் பெர்ரி படகுச் சவாரி, ஹாங்காங் ஸ்கைலைன், விக்டோரியா பீச், டியான் டான் புத்தர் சிலை, வோங் டான் சின் கோயில் உள்ளிட்ட பகுதிகள் பிரபலமான சுற்றுலாப் பகுதிகளாகும். இவற்றைக் கண்டுகளிப்பதற்காக உலகம் முழுவதிலிமிருந்து சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பர். இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஹாங்காங் தீவும் பாதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கும், விமானங்கள் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது.தற்போது கொரோனா தொற்று குறைந்ததையடுத்து கட்டுப்பாடுகளை ஹாங்காங் அரசு படிப்படியாகத் தளர்த்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த நிலையில், அதனில் இருந்து மீண்டுவருவதற்காக அவர்களைக் கவரும் வண்ணம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. ஆம், அதன்படி, ஹாங்காங் ஏர்லைன்ஸ் நிறுவனம், 5,00,000 விமான டிக்கெட்களை இலவசமாக வழங்கவுள்ளது. இதுகுறித்து கடந்த அக்டோபர் மாதமே செய்தி வெளியான நிலையில், தலைமை நிர்வாகியான ஜான் லீ, அதற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர், “கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 5 லட்சம் இலவச விமான டிக்கெட்கள் வழங்கப்பட உள்ளது” எனத் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகள் ஹாங்காங் ஏர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனங்களுடன் இணைந்து தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் பயணிகளின் தேர்வு விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement