வெல்லவாய பகுதியில் 5 வயது சிறுமி மாயம்!

வெல்லவாய- பள்ளிவாசலுக்கு பின்புறமாக பெற்றோருடன் வசித்து வந்த சிறுமியாருவர் நேற்று (10) காணாமல் போயுள்ளார்.

குறிப்பாக, செத்மி அன்சிகா என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த, சிறுமியின் வீட்டுக்கு கூலி வேலை செய்வதற்காக நபர் ஒருவர் வந்து செல்வதாகவும் நேற்று (10) பகல் இரண்டு மணியளவில் வீட்டுக்கு வந்துள்ள குறித்த நபர், சிறுமிக்கு யோகட் வாங்கிக்கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

எனினும், மாலை 6 மணியாகியும் சிறுமி வீட்டுக்கு வரவில்லை என தெரிவித்து, சிறுமியின் தாய் வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியை தேடும் நடவடிக்கையில் வெல்லவாய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை