சீனாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன்!

70

சீனாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை இன்று (12) கைச்சாத்திட்டுள்ளது.

சீன அபிவிருத்தி வங்கியுடனான இவ்வொப்பந்தத்தில் இலங்கை சார்பில் சீனாவுக்கான இலங்கைத் தூதர் கலாநிதி பாலித கோஹன கைச்சாத்திடுள்ளார்.

இக்கடனானது, கொவிட்-19 பரவல் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவை நிவர்த்தி செய்யப் பயன்படும் என, பீஜிங்கிலுள்ள சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இக்கடனானது, சீனாவிடமிருந்தான ஒரு பில்லியன் டொலர் கடனின் இரண்டாம் கட்ட விநியோகம் என்பதுடன், ஏற்கனவே 500 மில்லியன் டொலர் கடன் கந்த வருடம் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த பணப்பரமாற்றமானது இவ்வாரம் இடம்பெறுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: