தமிழ் மூலிகைகளுக்கு நம்ம ஆதிக்குடி ஏன் அப்படி பெயர் வைத்தான் தெரியுமா?

364

நமது முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் அல்லர் என்போம். ஆம் அவர்கள் செய்துவைத்துப்போன ஒவ்வொன்றுக்குள்ளும் அர்த்தங்கள் பல சூழ்ந்திருக்கின்றன.

சமீபத்தில் வெளியான குக்கூ குக்கூ பாடலில் சொல்லியிருப்பதுபோல், “நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணைக் கொடுத்தாண்டி பூர்வக்குடி, கம்மங்கரை காணியெல்லாம் பாடித்திரிந்தாண்டி ஆதிக்குடி” பாடல் வரிபோல் முன்னோர்கள் எதிர்கால சந்ததியினர்க்காக கொடுத்துவிட்டுச் சென்ற பொக்கிஷங்கள் ஏராளம்.

இன்று நாம் பெயர்குறிப்பிட்டுச் சொல்லும் சில சொற்களுக்கு முன்னோர் வகுந்துவைத்துச் சென்ற அர்த்தங்களைப் பார்ப்போம்.

வெப்பம் + இல்லை = வேப்பிலை. உடல் வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு என்கிறது தமிழ் மருத்துவம்.

கரு + வெப்பம் + இல்லை = கருவேப்பிலை. பெண்களின் கருப்பையில் வளரும் சிசுவுக்கு ஏற்படக்கூடிய வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் தன்மை கருவேப்பிலைக்கு உண்டு. அதனால் தான் கர்ப்பகாலத்தில் பெண்களை கருவேப்பிலை உணவில் சேர்க்கசொல்கிறார்கள். இது கரு வளர்ச்சிக்குத் தேவையான இரும்புச் சத்தைக் கொடுப்பதுடன் கர்ப்பிணிக்கான ஈமோகுளோபின் மட்டத்தை நேர்த்தியாக பேண உதவுகின்றது.

அகம் + தீ = அகத்தீ. உடலின் உள்ளே அகத்தின் தீயைக் குறைக்கும் சக்தி அகத்தி கீரைக்கு உண்டு. மனதைப் புத்துணர்ச்சியாக வைத்திருப்பதே இதன் அர்த்தமாகும்.

சீர் + அகம் = சீரகம். அகம் என்பது உள் உடல் ஆகும். ஆகவே உள் உடலில் தோன்றும் சிக்கல் நிலைகளை சீரகம் சீராக்குகின்றது. குறிப்பாக வாதப் பிரச்சினைகளிலிருந்து உடலைக் காப்பதற்காக உடலில் வாய்வு தோன்றுவதை சீரகம் தடுக்கும்.

பெரிய + காயம் = பெரும் காயம். காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என்பார்கள். காயம் என்றால் உடல். அந்த உடல் எனப்படும் காயத்தின் காற்றை வெளியேற்றும் தன்மை உள்ளதனாலேயே பெருங்காயம் அவ்வாறு அழைக்கப்படுகிறது.

வெம்மை + காயம் = வெங்காயம். உடலின் வெம்மையைப் போக்கும் அதுவே வெங்காயம்.

பொன் + ஆம் + காண் + நீ = அதுதான் பொன்னாங்கண்ணி. அதை நீ உண்டால் உடல் பொன் ஆகும் என்பதை நீ காண்பாயாக என்கிறது இதன் அர்த்தம்.

கரிசல் + ஆம் + காண் + நீ = கரிசலாங்கண்ணி காய்ச்சிய எண்ணெய் கூந்தலில் தேய்த்தால் கூந்தலை கரிசலாக்கும் என்பதை நீ காண்பாயாக.

இப்படிப்பட்ட சொற்களுக்குள் தான் மருத்துவத்தை வைத்தார்கள் நமது மகத்தான பாட்டன்மார்கள். செம்மொழி தமிழ்ச் சொற்களை மறந்தோம்.

நமது பாரம்பரிய மருத்துவத்தை மறந்தோம். அவைகளைச் சொன்ன பாட்டியையும் மறந்தோம். பாட்டனையும் மறந்தோம்.!”

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: