• Apr 24 2024

புற்று நோய்க்கான மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வர 6 மாதங்கள் தாமதம்!

Chithra / Feb 2nd 2023, 10:33 am
image

Advertisement

புற்று நோயாளர்களுக்கான சிகிச்சைக்காக உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து பெறப்படவுள்ள மருந்துகள் மேலும் ஆறு மாதங்களுக்கு தாமதமாகும் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் (NCCU) பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மருந்துகளை வாங்குவதற்கான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதே இதற்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மார்பக புற்றுநோய் மற்றும் தைராய்ட் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும் எனவும் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முக்கிய மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் மையமானது நாரஹேன்பிட்டியில் உள்ளதாகவும் இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளில் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் சிகிச்சை நிலையங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


புற்று நோய்க்கான மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வர 6 மாதங்கள் தாமதம் புற்று நோயாளர்களுக்கான சிகிச்சைக்காக உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து பெறப்படவுள்ள மருந்துகள் மேலும் ஆறு மாதங்களுக்கு தாமதமாகும் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் (NCCU) பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மருந்துகளை வாங்குவதற்கான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதே இதற்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, மார்பக புற்றுநோய் மற்றும் தைராய்ட் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும் எனவும் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.முக்கிய மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் மையமானது நாரஹேன்பிட்டியில் உள்ளதாகவும் இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளில் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் சிகிச்சை நிலையங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement