• Apr 20 2024

யாழில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6வயதுச் சிறுவன்: மூட நம்பிக்கையால் பரிதாபகரமாக உயிரிழப்பு!SamugamMedia

Sharmi / Mar 18th 2023, 10:58 am
image

Advertisement

குருதிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயதுச் சிறுவன் ஒருவன், உரிய மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்படாததை அடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்த 6வயதுச் சிறுவனுக்கு கடந்த ஆண்டு இறுதியில் குருதிப் புற்றுநோய் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

சிறுவனை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கவுள்ளதாக வீட்டார் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்து, விடுதியிலிருந்து சிறுவனை அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதத்தலம் ஒன்றுக்கு தினமும் அழைத்துச் சென்று பிரார்த்தனை மேற்கொண்டுவந்துள்ளனர்.

சிறுவனின் வயிறு வீங்கி வருவதையடுத்து, சிறுவனுக்கு உணவு வழங்குவதை குறைத்துள்ளனர். இந்த நிலையில் சிறுவன் இரண்டு நாள்களாக மூச்செடுக்க சிரமப்பட்டுள்ளான். இதன் பின்னர் அவன் உயிரிழந்துள்ளான்.

மத ரீதியான மூடநம்பிக்கையால் சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சையளிக்கப்படாமையே உயிரிழப்புக்கு காரணம் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

யாழில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6வயதுச் சிறுவன்: மூட நம்பிக்கையால் பரிதாபகரமாக உயிரிழப்புSamugamMedia குருதிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயதுச் சிறுவன் ஒருவன், உரிய மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்படாததை அடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்த 6வயதுச் சிறுவனுக்கு கடந்த ஆண்டு இறுதியில் குருதிப் புற்றுநோய் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. சிறுவனை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கவுள்ளதாக வீட்டார் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்து, விடுதியிலிருந்து சிறுவனை அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதத்தலம் ஒன்றுக்கு தினமும் அழைத்துச் சென்று பிரார்த்தனை மேற்கொண்டுவந்துள்ளனர்.சிறுவனின் வயிறு வீங்கி வருவதையடுத்து, சிறுவனுக்கு உணவு வழங்குவதை குறைத்துள்ளனர். இந்த நிலையில் சிறுவன் இரண்டு நாள்களாக மூச்செடுக்க சிரமப்பட்டுள்ளான். இதன் பின்னர் அவன் உயிரிழந்துள்ளான். மத ரீதியான மூடநம்பிக்கையால் சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சையளிக்கப்படாமையே உயிரிழப்புக்கு காரணம் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement