• Apr 20 2024

தாயாரின் சடலத்துடன் 6 ஆண்டுகள் வாழ்க்கை..!பொலிஸாரிடம் சிக்கிய 60 வயது மகன்...!samugammedia

Sharmi / Jun 1st 2023, 4:23 pm
image

Advertisement

இறந்த தாயாரின் உடலுடன் நபர் ஒருவர் 6 ஆண்டுகள் வசித்து வந்த சம்பவம் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.

இத்தாலி நாட்டின் வொரோனா பகுதியைச் சேர்ந்தவர் ஹெல்கா மரியா ஹெகன்பார்த் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  ஹெல்கா தனது 86 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

ஹெல்காவுக்கு மாதம் தோறும் கிடைக்கும் பென்ஷன் பணத்தினை இழந்து விட கூடாது என்பதற்காக அவரது மகன் தாயாரின் இறப்பினை இரகசியமாக வைத்திருக்க திட்டமிட்டுள்ளார்.

பின்னர் தாயாரின்  உடலை வீட்டிலே சடலம் வைக்கும் பையில் சுற்றி வைத்து வைத்து விட்டு, அயலவர்களிற்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தனது தாயார்  பூர்வீக ஊரான ஜெர்மனிக்கு சென்று விட்டதாக குறிப்பிட்டு வந்துள்ளார்.

இவ்வாறாக  ஆறு ஆண்டுகள் கழிந்த நிலையில், ஹெல்காவின் பென்ஷன் பணத்தை அவரது மகன் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக ஹெல்கா எந்தவித சுகாதார அட்டைகளையும் பயன்படுத்தவில்லை என்றும்  கோவிட்-19 காலத்தில் கூட தேவைப்படவில்லையா? என்றும்  இத்தாலி அதிகாரிகளுக்கு ஹெல்கா தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது.

அதையடுத்து மே 25 ஆம் திகதி ஹெல்காவின் வீட்டிற்குள்  அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்திய போது, தாயாரின் இறந்த சடலத்துடன் அவரது மகன் 6 ஆண்டுகள் அதே வீட்டில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

அந்த வகையில், இந்த ஆறு ஆண்டு காலத்தில் இந்திய மதிப்பில் ரூ.1.56 கோடி பென்ஷன் தொகையை ஹெல்காவின் மகன் பெற்று பயன்படுத்தியுள்ளார் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து பொலிஸார் ஹெல்காவின் மகனை கைது செய்துள்ளனர்.

தாயாரின் சடலத்துடன் 6 ஆண்டுகள் வாழ்க்கை.பொலிஸாரிடம் சிக்கிய 60 வயது மகன்.samugammedia இறந்த தாயாரின் உடலுடன் நபர் ஒருவர் 6 ஆண்டுகள் வசித்து வந்த சம்பவம் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது. இத்தாலி நாட்டின் வொரோனா பகுதியைச் சேர்ந்தவர் ஹெல்கா மரியா ஹெகன்பார்த் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  ஹெல்கா தனது 86 ஆவது வயதில் காலமாகியுள்ளார். ஹெல்காவுக்கு மாதம் தோறும் கிடைக்கும் பென்ஷன் பணத்தினை இழந்து விட கூடாது என்பதற்காக அவரது மகன் தாயாரின் இறப்பினை இரகசியமாக வைத்திருக்க திட்டமிட்டுள்ளார். பின்னர் தாயாரின்  உடலை வீட்டிலே சடலம் வைக்கும் பையில் சுற்றி வைத்து வைத்து விட்டு, அயலவர்களிற்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தனது தாயார்  பூர்வீக ஊரான ஜெர்மனிக்கு சென்று விட்டதாக குறிப்பிட்டு வந்துள்ளார். இவ்வாறாக  ஆறு ஆண்டுகள் கழிந்த நிலையில், ஹெல்காவின் பென்ஷன் பணத்தை அவரது மகன் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக ஹெல்கா எந்தவித சுகாதார அட்டைகளையும் பயன்படுத்தவில்லை என்றும்  கோவிட்-19 காலத்தில் கூட தேவைப்படவில்லையா என்றும்  இத்தாலி அதிகாரிகளுக்கு ஹெல்கா தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. அதையடுத்து மே 25 ஆம் திகதி ஹெல்காவின் வீட்டிற்குள்  அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்திய போது, தாயாரின் இறந்த சடலத்துடன் அவரது மகன் 6 ஆண்டுகள் அதே வீட்டில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. அந்த வகையில், இந்த ஆறு ஆண்டு காலத்தில் இந்திய மதிப்பில் ரூ.1.56 கோடி பென்ஷன் தொகையை ஹெல்காவின் மகன் பெற்று பயன்படுத்தியுள்ளார் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து பொலிஸார் ஹெல்காவின் மகனை கைது செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement