பேஸ்புக் முடக்கத்தால் டெலிகிராமுக்கு 7 கோடி புதிய பயனர்கள்

234

பேஸ்புக் மற்றும் அதற்குச் சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் கடந்த 4 ந் திகதி உலகளாவிய செயலிழப்பைச் சந்தித்தன.

அத்தோடு இந்த செயலிழப்பானது ஏறக்குறைய 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. எனினும் இந்நிலையில் உலகளவில் பல லட்சம் பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனால் ஒரே நாளில் 7 கோடி புதிய பயனர்கள் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதாக டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவல் துரோவ் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அவர், ஒரே நேரத்தில் பலர் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்ததால் அமெரிக்காவில் சில பயனர்கள் அதன் வேகம் குறைந்ததை உணர்ந்திருக்கலாம் ஆனாலும் பெரும்பாலான பயனர்களுக்கு வழக்கமாகவே வேலை செய்ததாக கூறினார்.

மேலும் டெலிகிராம் உலகம் முழுவதிலுமிருந்து திடீரென அதிக பயனர்களைப் பெறுவது இது முதல் முறை அல்ல. வாட்ஸ்அப் தன்னுடைய புதிய தனியுரிமைக் கொள்கையை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்ட போது கூட பல மில்லியன் கணக்கான பயனர்கள் டெலிகிராம் செயலியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: