இலங்கையில் நாளாந்தம் 7 பேர் பலியாகின்றனர்; காரணம் கொரோனா இல்லை!

725

ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட 1,959 வீதி விபத்துக்களில் 205 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 1,254 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ஏப்ரல் மாத்தில் அதிகளவில் விபத்துகள் பதிவாகியிருக்கின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கையை பார்க்கும் போது ஏப்ரல் மாதத்தில் பொதுவாக நாளாந்தம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகளவு விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், ஏப்ரல் மாதத்தில் பதிவான மொத்த விபத்துகளில் அது 51 சதவீதமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: