• Apr 23 2024

தமிழர் பிரதேசத்திலிருந்து 8பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்!samugammedia

Sharmi / Mar 28th 2023, 3:53 pm
image

Advertisement

கிளிநொச்சி பகுதியிலிருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒரு ஆண், ஐந்து பெண்கள், ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உட்பட எட்டு பேர் அகதிகளாக ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் இவ்வாறு நேற்று 27.03.23 ம் தேதி இரவு 8 மணியளவில் இலங்கை தலைமன்னாரிலிருந்து 1.45 லட்சம் இலங்கை பணம் கொடுத்து மர்மப்படகு மூலம் இரவு 10.30 மணிக்கு தனுஷ் கோடி மூன்றாம் மணல் தீடையில் இறக்கி விடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

அவர்களை  இன்று காலை இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர் கிராப்ட்  கப்பலில்சென்று மீட்டு தனுஷ்கோடியை அடுத்த அரிச்சல் முனை கடற்கரையில் ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தற்போது அவர்களை மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்று விசாரணைக்குப்பின் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழர் பிரதேசத்திலிருந்து 8பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்samugammedia கிளிநொச்சி பகுதியிலிருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒரு ஆண், ஐந்து பெண்கள், ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உட்பட எட்டு பேர் அகதிகளாக ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் இவ்வாறு நேற்று 27.03.23 ம் தேதி இரவு 8 மணியளவில் இலங்கை தலைமன்னாரிலிருந்து 1.45 லட்சம் இலங்கை பணம் கொடுத்து மர்மப்படகு மூலம் இரவு 10.30 மணிக்கு தனுஷ் கோடி மூன்றாம் மணல் தீடையில் இறக்கி விடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுஅவர்களை  இன்று காலை இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர் கிராப்ட்  கப்பலில்சென்று மீட்டு தனுஷ்கோடியை அடுத்த அரிச்சல் முனை கடற்கரையில் ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.தற்போது அவர்களை மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்று விசாரணைக்குப்பின் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement